Drieberg Old Boys Association Welfare International
டிறீபெக் பழைய மாணவர் சங்க சர்வதேச நலன்புரி அமைப்பு
சாவகச்சேரி
டிறீபெக் கல்லூரியின் பழைய
மாணவரும் ஆசிரியரும் ஒன்றிணைந்து
நடத்தும் டிறீபெக் பழைய மாணவர்
சங்கத்தின் இலங்கையின்
நலிவுற்ற தமிழ் மாணவர்களின்
கல்வியையும்,
வாழ்க்கைத்
தரத்தையும் உயர்த்தும்
முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட
நலன்புரி பகுதியின் சர்வதேச
அமைப்பு " டிறீபெக்
பழைய மாணவர் சங்க சர்வதேச
நலன்புரி அமைப்பு "
எனும் பெயரில்
அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வமைப்பின்
பிரதான நோக்கம் இலங்கையில்
நலிவுற்ற, ஆதரவற்ற
தமிழ் மாணவர்களின் வாழ்வின்
மேன்மைக்கு இவ்வமைப்பின்
அங்கத்தினர்களுடன்,
நலன்
விரும்பிகளின் உதவியையும்
பெற்று உழைப்பதாகும்.
பழைய
மாணவர்களுக்கிடையிலும் ,
ஆசிரியர்களுக்கிடையிலும்
அன்பையும் நட்பையும் பேணி
முழுப்புரிந்துணர்தலோடு
எதுவித இலாபமும் எதிர்பார்க்காது
எமது நாட்டில் அல்லலுறும்
ஆதரவற்ற, நலிவுற்ற
மாணவர்கள் பிராந்திய வேறுபாடின்றி
கல்வியில் மேன்மையடைய உதவுவதை
அடிப்படையாகக் கொண்டு
இயங்குவதையே எமது குறிக்கோளாகக்
கொண்டுள்ளோம்.
எமது
நடவடிக்கைகளை எமது பழைய
மாணவர், ஆசிரியர்களுக்கு
இடையில் மட்டுமின்றி உதவும்
மனப்பான்மை கொண்ட அனைத்து
மக்கள் மத்தியிலும் எடுத்துச்
சென்று உதவும் கரங்களை மேலும்
வலுப்படுத்தும் முயற்சியில்
முழுமூச்சுடன் செயல்பட்டு
வருகிறோம்.
இதுவரை
எமது முயற்சிகளுக்காக நிதி
சேகரிப்பதற்காக இங்கிலாந்தில்
பல நிகழ்ச்சிகளை நடத்தி நிதி
சேகரிப்போடு எமது நடவடிக்கைகள்
பற்றிய விழிப்புணர்வை எமது
நாட்டுப் புலம்பெயர் மக்கள்
மத்தியில் ஏற்படுத்தி
வந்திருக்கின்றோம்.
எமது
நடவடிக்கைகளுக்காக சேகரிக்கப்படும்
நிதிக்கான கணக்கு விபரங்கள்
எமது கணக்காளர்களினால் இலங்கை
அரசாங்கத்திடம் வருடாவருடம்
சட்டத்திற்கமைய சமர்ப்பிக்கப்பட்டு
வருகிறது. அது
தவிர இக்கணக்கு விபரங்களை
அறிய விரும்புவோர் யாராயினும்
எமது நடவடிக்கை குழுவினை
தொடர்பு கொள்வது மூலம் அதனைப்
பெற்றுக் கொள்ளலாம்.
இதுவரை
பல செயற்திட்டங்களை அமுல்படுத்திய
நாம் எமது அடுத்த கட்ட
நடவடிக்கையாக ஆதரவற்ற 100
தமிழ்க்குழந்தைகளை
முதல் தரத்தில் இருந்து
பல்கலைக்கழகம் வரை கல்விபெற
உதவும் முகமாக அவர்கள் தங்கிப்
படிப்பதற்கு ஏதுவாக 100
பேர் தங்கக்கூடிய
நவீன வசதிகளுடனான விடுதி
ஒன்றை அமைக்கவுள்ளோம்.
இதற்கான
நிலம் ஏற்கனவே கொள்வனவு
செய்யப்பட்டு விட்டது.
மிக விரைவில்
அடிக்கல் நாட்டப்படவிருக்கிறது.
தங்குமிடம்
மட்டுமின்றி அவர்களின்
கல்விச்செலவு அனைத்தும்
எம்மால் பொறுப்பேற்கப்படுகிறது.
இம்மாணவர்களின்
தெரிவு வடக்கு,
கிழக்கு,மலையகம்
என்ற பாரபட்சம் காட்டப்படாது
தகுதி அடிப்படையில் நடத்தப்படும்.
எமது
இந்த அமைப்பின் நிர்வாகக்
குழு பின்வருமாறு
- தலைவர் :திரு கே.அருந்தவபாலன் ( அதிபர்)
- இணைக் காரியதரிசிகள் : திரு கே. சண்முகலிங்கம் ( மேலாளர், மக்கள் வங்கி , சாவகச்சேரி )
: திரு
எஸ். மார்க்கண்டு
( ஆசிரியர்
)
- பொருளாளர் : திரு எஸ்.சிறீபாஸ்கரன் (ஆசிரியர்)
- உறுப்பினர்கள் : திரு எம்.நாகேந்திரராஜா (முன்னால் அதிபர்)
: திரு
எஸ்.கோகுலன்
: திரு
கே.ஜீவகதாஸ்
: திரு
வீ.ராஜரட்ணம்
( ஓய்வு
பெற்ற கிராம சேவகர் )
: திருமதி
எம்.தேவகுமார்
: திருமதி
டீ.நாகராஜா
: திருமதி
ஆர்.யோகநந்தன்
: திருமதி
எஸ்.சிவஞானம்
: திரு
டீ.தர்மலிங்கம்
- செயற்திட்ட சர்வதேச ஒருங்கிணைப்பாளர் : திரு சீ.பீ.சிவராஜா
எதுவித
சுயநோக்குமின்றி எமது வருங்காலச்
சந்ததியின் மேன்மையை மட்டும்
கருத்திற்கொண்டு நடத்தப்படும்
இவ்வமைப்பின் அனைத்து
நடவடிக்கைகளும் எதுவித ஒளிவு
மறைவுமின்றி பகிரங்கமாகவே
நடத்தப்படும்.
இன,
மத பாகுபாடின்றி
பொதுநல நோக்கோடு நாம் மேற்கொள்ளும்
இந்நடவடிக்கைகளுக்கு பழைய
மாணவர், ஆசிரியர்
மட்டுமின்றி பொதுநல நோக்கும்,
சமுதாய
உணர்வும் கொண்ட அனைத்து
மக்களும் முன்வர வேண்டும்
என அன்பான வேண்டுகோள்
விடுக்கின்றோம்.
காலம்
எம் மக்கள் மீது திணித்த
இன்னல்களைக் கடந்து அவர்கள்
மேற்கொள்ளும் பயணத்தை இலகுவாக்க
நாம் அனைவரும் கைகோர்த்து
உதவுவோம் வாருங்கள்.
தங்கள்
ஆதரவினை நாடும்
நிர்வாகக்
குழு

No comments:
Post a Comment